செய்திகள்

கருணாநிதி விரைவில் பேசுவார்: மு.க.அழகிரி பேட்டி

Published On 2017-11-01 12:00 IST   |   Update On 2017-11-01 12:00:00 IST
தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருக்கிறார். அவர் சீக்கிரம் பேசுவார் என்று எதிர்பார்ப்பதாக மு.க.அழகிரி கூறினார்.
ஆலந்தூர்:

சென்னை கோபாலபுரத்தில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் திருமணத்தில் மு.க. அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் கருணாநிதியை சந்தித்தார்.

இன்று காலை அவர் விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-


தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருக்கிறார். அவர் சீக்கிரம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி ஆஸ்திரேலியா சென்றுள்ள டாக்டர்கள் திரும்பி வந்த பிறகு தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News