பரமக்குடியில் மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி
பரமக்குடி:
பரமக்குடியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கார் டிரைவர். இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்காக பெற்றோருடன் மதுரை கிருஷ்ணாபுரத்தில் வீடு எடுத்து தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகவில்லை.
இதைத்தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சுபாஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த ஜோசப் கென்னடி மகன் நலன்ராஜ் (23) காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி நலன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.