செய்திகள்
இரா.கண்ணன் ஆதித்தன்

திருச்செந்தூர் கோவில் தக்காராக இரா.கண்ணன் ஆதித்தன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Published On 2018-02-06 09:55 IST   |   Update On 2018-02-06 09:55:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் தக்காராக இரா.கண்ணன் ஆதித்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

முருகன் குடிகொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையோரம் உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோவிலாகும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த திருக்கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசிப்பது வழக்கமாக இருக்கிறது.

சூரனை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் இந்த திருச்செந்தூர் கோவில் தலமாகும். ஆண்டுதோறும் இங்கு நடக்கும் சூரசம்ஹாரத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு. இத்தகைய இறைவன் அருள் பெற்ற சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தற்போது பி.டி.கோட்டை மணிகண்டன் தக்காராக பணியாற்றி வந்தார்.

தற்போது அவரை மாற்றி, ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தக்காராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த ஆணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.  #tamilnews

Similar News