செய்திகள்
ராணிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை
ராணிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி தமிழன்னை தெருவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு உள்ளே சென்றனர். அங்கிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சுவரில் துளையிருப்பதை கண்டு திடுக்கிட்ட பொது மக்கள் விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கைரேகை சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.