செய்திகள்

ஆசிய விளையாட்டு- கராத்தே தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு

Published On 2018-08-25 15:25 IST   |   Update On 2018-08-25 15:25:00 IST
ஆசிய விளையாட்டில் கராத்தே போட்டிகள் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே தியாகராஜன் இந்தோனேசியா சென்றுள்ளார். #AsianGames2018
சென்னை:

ஆசிய விளையாட்டில் கராத்தே போட்டிகள் இன்று (25-ந் தேதி) முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா சார்பில் சரத் (75 கிலோ பிரிவு), விஷால் (84 கிலோ) பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளர் ஜெய்தேவ் சர்மா, இந்திய கராத்தே சம்மேளன பொதுச் செயலாளர் பரத் சர்மா ஆகியோரும் சென்றுள்ளனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே தியாகராஜனுக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலும் இந்தோனேசியா ஆசிய விளையாட்டு குழுவும் அழைப்பு விடுத்து இருந்தது. இதையேற்று அவர் நேற்று இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். கராத்தே தியாகராஜன் ஆசிய கராத்தே சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். #AsianGames2018
Tags:    

Similar News