செய்திகள்

பெட்ரோல் விலை 86 ரூபாயை எட்டியது- டீசல் விலையும் மிரட்டுகிறது

Published On 2018-10-13 10:59 IST   |   Update On 2018-10-13 10:59:00 IST
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருப்பதால் பெட்ரோல் விலை 86 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் விலையும் மிரட்டுகிறது. #Petrolpricehike #dieselprice

சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளும் தினமும் உயர்த்தப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்வதால், தங்களுக்கு இழப்பு ஏற்பட கூடாது என்று, அந்த விலை உயர்வை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தி விடுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 2½ மாதங்களாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.92 காசு களாக விற்பனையானது.

சில பங்குகளில் பெட்ரோல் விலை 86 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோலை விட டீசல் விலைதான் கடந்த சில தினங்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் அதிகரித்தது.

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.51-க்கு விற்பனையானது. சில இடங்களில் ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாயை எட்டி உள்ளது. #Petrolpricehike #dieselprice 

Tags:    

Similar News