செய்திகள்
தற்கொலை

தவளக்குப்பம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-07-04 17:23 IST   |   Update On 2019-07-04 17:23:00 IST
தவளக்குப்பம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் ஆனந்தா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் முருகன் காயம் அடைந்தார். வலது தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் வேலைக்கு எதுவும் செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது மகன்களிடம் பணம் பெற்று செலவு செய்து வந்தார்.

தொடர்ந்து மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பாத முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News