செய்திகள்
போதை மாத்திரை சாப்பிட்ட 2 வாலிபர்கள் கைது
போரூர் அருகே போதை மாத்திரையை மதுவில் கலந்து குடித்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம், கட்டபொம்மன் தெருவில் உள்ள வீட்டில் சிலர் போதை மாத்திரைகள் உட்கொண்டு வருவதாக எம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வீட்டுக்கு போலீசார் சென்று அதிரடியாக சோதனை செய்தனர் அப்போது ஒரு அறையில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போதை மாத்திரை பயன்படுத்தி வந்த பாலாஜி (24), அவரது நண்பர் மணிகண்டன் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி டாக்டரிடன் மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட தியாகராய நகர் ஸ்ரீநிவாசா ரோட்டில் மெடிக்கல் கடை நடத்தி வரும் ரவி என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மாத்திரை தூக்கமின்மைக்காக பயன்படுத்துவது என்பதும் இதை மதுவுடன் கலந்து உட்கொண்டால் அதிகப்படியான போதை கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் கூறியதால் கடந்த 3 மாதங்களாக பாலாஜியும், மணிகண்டனும் இந்த மாத்திரையை உட்கொண்டு போதையில் மிதந்து வந்தது தெரியவந்துள்ளது.
பாலாஜியும், மணிகண்டனும் மருந்து கடையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி நண்பர்களுக்கும் சப்ளை செய்து வந்து உள்ளனர்.
கைதான 3 பேர் மீது போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.