செய்திகள்
பலத்த மழை நீடிப்பு- காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
காரைக்கால் பகுதியில் இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் அம்மாவட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. வானமே பிளந்து ஊற்றுவது போல் மழை பெய்ததால் தாழ்வான பகுகளில் மழை நீர் தேங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் காரைக்கால் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா பிறப்பித்து உள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் நெல் நாற்று நடவு பணியினை தொடங்கி உள்ளனர்.