செய்திகள்
பெரியமேட்டில் தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
பெரியமேட்டில் தள்ளுவண்டி கடையை சேதப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பெரியமேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சிவராஜன்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி தனது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த அப்துல் ரகுமான் என்பவரின் தள்ளுவண்டி கடையை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் அபரோஸ் அகமது என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இன்ஸ்பெக்டர் சிவராஜன், கடையை சேதப்படுத்திய வீடியோ பதிவும் சிக்கி இருந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி பெரியமேடு போலீசார், தங்களது காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவராஜன் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு போடப்பட்டுள்ளனர். இது பற்றி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.