செய்திகள்
முக ஸ்டாலின்

வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி- மு.க.ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பதிவு

Published On 2020-03-02 09:40 IST   |   Update On 2020-03-02 09:40:00 IST
என் பிறந்த நாளில் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலிவுற்று இருக்கும் சூழலில் மார்ச் 1-ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் மன நிலையில் இல்லை’ என்றும், ‘தி.மு.க.வினர் தனக்கு வாழ்த்து சொல்ல வரவேண்டாம்’ என்றும் கூறி இருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து, தமிழகம் முழுவதும் தி.மு.க. கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.



இதைக்கண்டு நெகிழ்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘இனமானப் பேராசிரியர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்திருந்தேன்.

இருப்பினும் வாழ்த்துகள் சொல்லியும், பூங்கொத்து அனுப்பியும் நலத்திட்ட உதவிகள் செய்தும் பெருமைப்படுத்திய உள்ளங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். உங்கள் வாழ்த்து எனக்கு உரமாகும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News