செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 3 வட மாநில வாலிபர்கள் கைது

Published On 2020-03-02 11:56 IST   |   Update On 2020-03-02 11:56:00 IST
கோவையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 வட மாநில வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை:

உத்தரபிரதேச மாநிலம் குஷி பகுதியை சேர்ந்தவர்கள் சோணு (வயது 23), நசீர் (27), சம்சேத் (28). இவர்கள் 3 பேரும் கோவை போத்தனூர் அருகே உள்ள சுந்தராபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்தனர். பின்னர் 3 பேரும் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். சோணு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்து போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர். போத்தனூர் போலீசார் 3 பேரையும் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சோணு, இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் நசீர், சம்சேத் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News