செய்திகள்
தற்கொலை

அரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை

Published On 2020-03-02 20:30 IST   |   Update On 2020-03-02 20:30:00 IST
அரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 50). இவரது மனைவி ஷாம்ஷாத் பேகம். கடந்த 13 வருடங்களுக்கு முன்பு அலாவுதீன் டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அலாவுதீன் இருந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அலாவுதீன் விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அலாவுதீனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அலாவுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News