செய்திகள்
சாப்பிட உணவில்லாமல் அந்தமானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: முதல்-அமைச்சர் உதவ வேண்டுகோள்
அந்தமானில் தவிக்கும் தமிழக மீனவர்களின் குடும்பத்தினரும், தமிழக மீனவர் சங்கங்களும் அந்தமானில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீன்பிடி தொழில் அடியோடு முடங்கியது. பாம்பன் தீவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு அவர்களது காண்டிராக்டர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருசில நாட்களுக்கு உணவு வழங்கினார்கள். அதன் பின்னர் உணவு வழங்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். இதனால் தமிழக மீனவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் தவிக்கின்றனர். இந்த நிலையில் அந்தமானில் தவிக்கும் தமிழக மீனவர்களின் குடும்பத்தினரும், தமிழக மீனவர் சங்கங்களும் அந்தமானில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.