செய்திகள்
அரக்கோணம் அருகே குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
அரக்கோணம் அருகே குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு கொலை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த சுவால்பேட்டையை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது29), மற்றும் கிரிபில்ஸ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்ற யமஹா மணிகண்டன் (26) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.