செய்திகள்
பெட்ரோல், டீசல்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Published On 2021-02-05 06:49 IST   |   Update On 2021-02-05 06:49:00 IST
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 89.39 ரூபாய், டீசல் லிட்டருக்கு 82.33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சர்வதேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது. இதன் காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.13 ரூபாய், டீசல் லிட்டர் 82.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.39 ரூபாய்க்கும், டீசல் விலையில் 29 காசுகள் உயர்ந்து 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .

இந்த விலை காலை முதல் அமலுக்கு வந்தது.

Similar News