செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கார், வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கார், வேன் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு கார் மற்றும் வேன் டிரைவர்கள் மற்றும் அனைத்து வாகன டிரைவர்கள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். செயலாளர் நவீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.