செய்திகள்
கருங்கல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை- தொழிலாளி கைது
கருங்கல் அருகே முன்விரோதத்தில் வாலிபரை வெட்டி கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே உதய மார்த்தாண்டம் குற்றிப்பாறைவிளை பகுதியை சேர்ந்த ரசலையன் மகன் பெனில்குமார் (வயது 26). திருமணம் ஆகாதவர்.
இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளியான தங்கத்துரை (56) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பெனில்குமார், தங்கதுரையின் வீட்டிற்குள் சென்று தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த தங்கத்துரை, பெனில்குமாரைக் கீழே தள்ளி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பெனில் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று அதிகாலை பெனில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர்.