செய்திகள்
அமராவதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட காட்சி.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published On 2021-05-16 12:33 IST   |   Update On 2021-05-16 12:33:00 IST
உடுமலை அமராவதி அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் அமராவதி ஆற்றில் உள்ள முதல் 6 பழைய ராஜ வாய்க்கால்களில் உள்ள 4686 ஏக்கர்  பாசன பகுதிகளுக்கு  இன்று முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை மொத்தம் 135 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதில் 55 நாள்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், முதல் போக பாசனத்துக்காக  மொத்தம் 1,728 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.  நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.,ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

Similar News