செய்திகள்
விழுப்புரம் ஒட்டனேந்தல் சம்பவம்: இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும் என கமல் டுவீட்
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?.
விழுப்புரம் மாவட்டம் ஒட்டனேந்தலில் கோவில் திருவிழாவை நடத்தியதற்காக ஊர் பஞ்சாயத்தில் முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் 50 பேர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?.
திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்.
எனத் தெரிவித்துள்ளார்.