செய்திகள்
வாய்மேடு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தென்னடார் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கினர். இதேபோல தகட்டூர் ஊராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தகட்டூர் கடைத்தெரு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, , ஊராட்சி செயலாளர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.