செய்திகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
சென்னை :
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், பூந்தமல்லி என புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.