செய்திகள்
கோப்புப்படம்

வீட்டுமனை பட்டா கேட்டு குவியும் மனுக்கள்

Published On 2021-06-29 12:57 IST   |   Update On 2021-06-29 12:57:00 IST
முதியோர் பென்ஷன், ரேஷன் கார்டு கேட்டும் அதிகளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அவிநாசி:

இணைய வழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் நோக்கில் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் 2 நாட்கள் ஜமாபந்தி நடத்தப்பட்டது.இதில் இதுவரை 280 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 75க்கும் மேற்பட்ட மனுக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் முதியோர் பென்ஷன், ரேஷன் கார்டு கேட்டும் அதிகளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 31-ந்தேதி வரை இணைய வழியில் மனுக்களை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த துறை நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தாசில்தார் தமிழ்ச்செல்வன் கூறினார்.

Similar News