செய்திகள்
தென்காசி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தென்காசி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று தென்காசிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.