செய்திகள்
திருப்பூரில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்த காட்சி.

வழிபாட்டுத்தலங்கள் மூடல்-திருப்பூரில் வீடுகளிலேயே பொதுமக்கள் வழிபாடு

Published On 2021-08-08 14:27 IST   |   Update On 2021-08-08 14:27:00 IST
ஆடி அமாவாசையான இன்று கோவில்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமலும் தர்ப்பணம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
திருப்பூர்:

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை பக்தர்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் 3 நாட்களும் சுவாமிக்கு பூஜை நடத்தப்பட்டு உடனடியாக மூடப்படுகிறது. 

இதனால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற  திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் 3 நாட்களாக மூடப்பட்டன.

இதனால் ஆடி அமாவாசையான இன்று கோவில்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமலும் தர்ப்பணம் கொடுக்க முடியாத நிலையும்    ஏற்பட்டது. மேலும் ஆடி பூரம் அன்றும் கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.

இதேபோல் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களும், மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் இருந்தே கிறிஸ்தவர்கள் ஆராதனை செய்தனர். ஆனால் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே பக்தர்கள் வருவதால் வழிபாட்டுக்கு அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News