செய்திகள்
காய்கறி-பழங்களை சாப்பிடுவதன் மூலம் நோய்களை தவிர்க்கலாம்-சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்
பொதுவாக உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருந்து, மாத்திரை உட்கொள்வர். மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களை காட்டிலும் தொடர்ந்து பலர் உட்கொள்கின்றனர்.
திருப்பூர்:
சத்தான உணவு பொருட்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் மருந்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவர்கள் கூறியதாவது:-
பொதுவாக உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருந்து, மாத்திரை உட்கொள்வர். மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களை காட்டிலும் தொடர்ந்து பலர் உட்கொள்கின்றனர்.
நோய் குணமானாலும் சிலர் தொடர்ந்து மருந்து சாப்பிடுகின்றனர். குறிப்பாக முதியோர் எங்கு சென்றாலும் மருந்து, மாத்திரை பெட்டிகளை தூக்கி செல்கின்றனர். அதுவே ஒரு வியாதி போல் ஆகிவிடும்.
ஆனால் சித்த மருத்துவத்தை பொருத்தவரை, ‘மருந்தே உணவு, உணவே மருந்து என்பதுதான் நிதர்சனம். எனவே உடலுக்கு எந்த உபாதை வந்தாலும் மருந்தை அளவோடு உட்கொண்டு சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை உட்கொள்வதன் மூலம் நோய்களை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.