செய்திகள்
காங்கேயம் நகராட்சி ஆணையர் மீது பெண் ஊழியர்கள் பரபரப்பு புகார்
பெண் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிப்பதுடன், பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் பெண்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று கொசுப் புழுக்களை அழிப்பதுடன், பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கேயம் நகராட்சிஆணையர், பெண் பணியாளர் ஒருவரை அவரது வீட்டிற்கு கோலம் போட வருமாறு அழைத்ததுடன், தவறாக நடக்க முயன்றதாகவும் பெண் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று அவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரால் வேலையை விட்டு நீக்கப்பட்ட 18 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கொசுப்புழு பெண் பணியாளர்களின் பணியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.