உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி-மைசூர் விரைவு ரெயிலில் முன்பதிவில்லா 2 பெட்டிகள் இணைப்பு
தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
தற்போது தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
அதாவது இதுவரை முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்ட 2-ம் வகுப்பு பெட்டிகள் 2-ம் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.