உள்ளூர் செய்திகள்
அதிமுக

சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் மாயம்

Published On 2022-02-27 06:47 GMT   |   Update On 2022-02-27 06:50 GMT
அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், சிவகாசி நகராட்சிகள் இணைக்கப்பட்டு 48 வார்டுகளுடன் சிவகாசி மாநகராட்சி உருவானது. இந்த மாநகராட்சி முதன் முறையாக தற்போது தேர்தலை சந்தித்தது.

இங்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 2-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். 4-ந்தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 30-வது வார்டு உறுப்பினர் கரை முருகன் தவிர மற்ற 10 பேரும் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது.

இதுபற்றி விசாரித்ததில் கும்பகோணம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதி கோவில்களுக்கு வழிபட சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஒட்டுமொத்தமாக சென்று ஏன்? என்பது தெரிய வில்லை.

மாவட்ட அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

இதையும் படியுங்கள்... ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது

Similar News