உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள்.

அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வினியோகம்

Published On 2022-03-08 14:28 IST   |   Update On 2022-03-08 14:28:00 IST
கொடைக்கானல் அருகே அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 176 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு மேஜை, நாற்காலிகள் இல்லாததால் சில மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இது குறித்து ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் இ.பெரியசாமி மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் 40 டெஸ்க், 40 பெஞ்ச், 5 மேஜை, 5 நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News