உள்ளூர் செய்திகள்
.

தருமபுரி பஸ்நிலையத்தில் பயணி கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்த பெண் கைது

Published On 2022-03-08 15:42 IST   |   Update On 2022-03-08 15:42:00 IST
தருமபுரி பஸ்நிலையத்தில் பயணி கழுத்தில் இருந்து 4 பவுன் நகையை திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தருமபுரி:

கிருஷ்ணகிரியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு தருமபுரி புறநகர் பஸ்நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது அந்த பஸ்சில் இருந்து இறங்கிய ஒரு பயணியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பெண் ஒருவர் பறித்து விட்டு ஓடினார். 

இதனால் அவர் அலறினார். உடனே பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அந்த பெண் விரட்டி சென்று மடக்கி பிடித் தனர். 

இது பற்றி தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பயணியிடம் நகைபறித்த பெண்ணை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஈசல்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி மகேஸ்வரி (வயது40) என்பது தெரியவந்தது. அப்போது அந்த பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து மகேஸ் வரியை கைது செய்தனர்.

Similar News