உள்ளூர் செய்திகள்
புதிய பஸ் நிறுத்தத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டிய காட்சி.

உடன்குடியில் புதிய பஸ் நிறுத்தத்திற்கு அடிக்கல் நாட்டு விழா-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Published On 2022-05-28 09:43 GMT   |   Update On 2022-05-28 09:43 GMT
உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரத்தில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்
உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சி கந்தபுரத்தில் ரூ.5.50 லட்சத்தில் புதிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நட்டினார்.
 
பின்பு அமைச்சர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும், சாதி மதம் பாராமல் அரவணைத்துச் செல்லும் ஒரே முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான். மக்கள் பணி செய்வதில் மகத்தான சாதனை படைத்து வருகிறார். 

வீடு தேடி மருத்துவம், அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களை சென்று மக்கள் குறை தீர்க்கும் திட்டம்.   பெண்களுக்கு இலவச பயணம், பெண்கள் அழைத்துச் செல்லும் குழந்தைகளுக்கு இலவச பயணம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் இப்படி பல்வேறு வகையான தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் என்றும் ஆதரவாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பாலசரஸ்வதி, துணைத்தலைவர் ராஜ்குமார், தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News