உள்ளூர் செய்திகள்
தர்ணாவில் ஈடுபட்ட தாய்-மகள்.

நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு தாய்-மகள் தர்ணா போராட்டம்

Published On 2022-05-29 15:12 IST   |   Update On 2022-05-29 15:12:00 IST
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு சீவலப்பேரியை சேர்ந்த தாய்-மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

பாளை சீவலப்பேரி அருகே  உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் புதிய முத்து. இவரது மனைவி ஜோதிலெட்சுமி ( வயது 50). இவர் இன்று தனது தாயுடன் நெல்லை கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சீவலப்பேரியில் உள்ள ஒரு கோவிலில் எனது தந்தை சாமியாடி வந்தார். அவர் இறந்ததற்கு பின்னர் எங்கள் குடும்பத்தினரை கோவிலில் அனுமதிக்க மற்றொறு தரப்பினர் மறுத்து வருகிறனர்.

இது தொடர்பாக ஏற்கனவே நெல்லை சரக டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  புகார் தெரிவித்துள்ளேன்.

மேலும் அந்த தரப்பினர் நேற்று இரவு எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்தேன். அதன் பேரில் 2 போலீசார் எங்கள் வீட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை அவர்கள் சென்று விட்டனர். எங்கள் உயிருக்கு  பாதுகாப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர்களுடன் கலெக்டர் முகாம் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினர்.  அப்போது இதுதொடர்பாக புகார்மனு அளிக்க வலியுறுத்தினர்.  இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News