உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா கருத்தரங்கம்

Published On 2022-06-04 14:54 IST   |   Update On 2022-06-04 14:54:00 IST
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
வீ. கே. புதூர்:

 குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை ஆய்வு மையம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள புதிய கலையரங்கத்தில் நடைபெற்றது.  

மகாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் அன்புமணி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஜெய்நிலா சுந்தரி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் விஜிலா நேசமணி துறை அறிக்கையினை வாசித்தார். 

இயல் தமிழ் குறித்து பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன் எடுத்துரைத்தார். காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியரும் தலைவருமான முத்தையா இசைத்தமிழ் குறித்து எடுத்துரைத்தார். 

நாடகத்தமிழ் குறித்து கல்லூரியின் உதவி பேராசிரியர் பாண்டிமாதேவி  பேசினார். இறுதியில் முத்தமிழ் விழா கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறினார். ஸ்ரீ பராசக்தி கல்லூரி மற்றும் பள்ளியின் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News