உள்ளூர் செய்திகள்
3 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி- போலீசார் நடவடிக்கை
- வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
- இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்கள் அதிகாலை முதல் வாகனங்களில் அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை- விக்கிரவாண்டி ஜி.எஸ்.டி ரோட்டில் விஜய் கட்சி கொடி கட்டிய கார்கள், பஸ்கள், வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றது.
இதன் காரணமாக விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் த.வெ.க. கட்சி வாகனங்கள் செல்ல தடுப்புகளை அகற்றி தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.