உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே சோதனை: 330 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்-பெண் உள்பட 3 பேர் கைது
- கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் உத்தரவின்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது துறைமுகம்ஆ ற்றங்கரை வீதியை சேர்ந்த பிரியன் (வயது 30) என்பவர் சுமார் 120 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்.
பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்ததெய்வானை ( 55) என்பவர் சுமார் 70 லிட்டர் சாராயம், தியாகவல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்த தர்மமூர்த்தி (வயது 31)என்பவர் சுமார் 145 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். இவர்களிடம் போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.