உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது
மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது
கடலூர்:
ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.