உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 699 ஏரிகள் நிரம்பின

Published On 2024-12-13 06:49 GMT   |   Update On 2024-12-13 07:06 GMT
  • கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
  • உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

வங்கடலில் உருவான ஃபெஞ்ஜல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 210 ஏரிகள் என மொத்தம் 699 ஏரிகள் முழுவது நிரம்பி உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் என மொத்தம் 909ஏரிகள் உள்ளன. இதில் 489 ஏரிகள் முழு கொள்ளள எட்டி உள்ளது.

அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 581 ஏரிகள் உள்ளன. இதில் 210 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதம் 175 ஏரிகளும், 50 சதவீதம் 119 ஏரிகளும், 25 சதவீதம் 73 ஏரிகளும், 20 சதவீதம் 7 ஏரிகளும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கேசாவரம் அணைக்கட்டு திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கேசாவரம் அணைக்கட்டு நிரம்பியதால் 5 ஷட்டர்கள் மூலம் கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது. இதேபோல் 100 கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ள கால்வாய் வழியே செல்கிறது.

இதனால்ஏரி கரையோரம் உள்ள நேமம், படூர், குத்தம்பாக்கம், இருளப்பாளையம், உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News