உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

Published On 2024-12-09 13:52 IST   |   Update On 2024-12-09 13:52:00 IST
  • மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  • மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை:

சட்ட சபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதவரம் தொகுதியில் 4 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால் துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகளை மாற்றி அமைக்கப்படுமா என்று உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 3½ ஆண்டுகளில் 71,145 மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

Similar News