உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே தேங்காய் நார் குடோனில் தீ விபத்து

Published On 2023-02-09 13:54 IST   |   Update On 2023-02-09 13:54:00 IST
  • தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது.
  • காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், கே ஆர் தோப்பூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45).

இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் குடோன் உள்ளது.

இந்த தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ வேகமாக பரவி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. தொடர்ந்து

தீ கட்டுக்குள் வராததால் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். வெகுநேர போராட்டத்திற்கு பின்பு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நார் முற்றிலும் எரிந்தது.

இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News