உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
கூடலூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
- குடி பழக்கத்தால் வயிற்று வலி ஏற்பட்டது.
- கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.மேலும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். குடி பழக்கத்தால் வயிற்று வலி ஏற்பட்டது.
பல்ேவறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த மணி அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.