உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட நல்லபாம்பு.

நத்தத்தில் கடைக்குள் புகுந்த நல்லபாம்பு

Published On 2023-09-23 10:21 IST   |   Update On 2023-09-23 10:21:00 IST
  • இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார்.
  • இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை.பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

நத்தம்:

நத்தத்தை சேர்ந்தவர் பெரியநாச்சியப்பன்(45)). இவர் கொட்டாம்பட்டி சாலையில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட வீரர்கள் கடைக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Tags:    

Similar News