ஆடி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
- 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி பண்டிகையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில், ராஜா கோவில், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில், பேட்டை மகா மாரியம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாண்டமங்கலம் பகவதி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரிம்
மன் கோவில், அய்யம்
பாளையம் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில், ஆனங்கூர் மாரிய ம்மன், செல்லாண்டியம்மன் கோவில், வடகரை யாத்தூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.