உள்ளூர் செய்திகள்
ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது
- ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.