உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

Published On 2022-09-22 09:17 GMT   |   Update On 2022-09-22 09:17 GMT
  • சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள அய்யம்புதூர் மாங்காடு காலனியில் காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
  • உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள அய்யம்புதூர் மாங்காடு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர், நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஸ்ரீதேவி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வீடு புகுந்து திருடிய மேட்டூர் அருகே உள்ள குள்ளவீரன்பட்டியை சேர்ந்த பிரவீன்செரிப் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News