குரும்பூரில் பழக்கடை வியாபாரியிடம் பணத்தை பறித்த வாலிபர் கைது
- தந்தை, மகனான மகேந்திரன், சதிஷ் ஆகியோர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.
- அங்கமங்கலம் தோணிபாலம் அருகே சதிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
குரும்பூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் அடுத்த மாரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சதிஷ் (வயது 23). இவரும், இவரது தந்தையும் திருச்செந்தூர் கே.டி.சி. டெப்போ அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த மாசானமுத்து (25) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதிஷ் பைக் வாங்குவதற்காக திருச்செந்தூர் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மாசானமுத்து, உன் தந்தை என்னிடம் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்தை தரவில்லை என்று தகராறு செய்து, அந்த பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சதிஷ் அங்கமங்கலம் தோணிபாலம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.