ஆத்தூர்-மல்லியக்கரை சாலையில் நாளை மறுநாள் முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை
- மல்லியக்கரை - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சா லையில், ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இதனால் அவ்வழியாக செல்லும் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட கோட்டப்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலத்தில் இருந்து மல்லியக்கரை - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சா லையில், ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 15-ந் தேதி முதல் மல்லியக்கரை - ஆத்தூர் வழியாக செல்லும் இருசக்கர மற்றும் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அருகில் உள்ள ஸ்டீல் மில் ரோட்டில் உள்ள ரெயில்வே கீழ்பா லத்தை பயன்படுத்தி அவ்வழியாக செல்லலாம்.
ராசிபுரம் - ஆத்தூர் செல்லும் கனரக வாக னங்கள் வாழப்பாடி வழியா கவும் (வாழப்பாடி- திம்ம நாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி- ஆத்தூர் செல்லும் கனரக வாக னங்கள் தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழி யாக ஆத்தூர் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், மல்லியக்கரை - ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணி கள் முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.