உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

Published On 2023-04-08 09:26 GMT   |   Update On 2023-04-08 09:26 GMT
  • கடந்த 2 நாட்களாக பரமத்திவேலூரில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, பள்ளி சாலை, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இதில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஒட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக பரமத்திவேலூரில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, பள்ளி சாலை, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஒட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனங்களை ஒட்டி வந்த 8 சிறுவர்கள் மீதும், அவர்களது பெற்றோர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பெற்றோர்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தால், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News