உள்ளூர் செய்திகள்
சங்கராபுரத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களிடம் சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.
சங்கராபுரத்தில் அதிரடி: பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்
சங்கராபுரம் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கெண்டனர்.அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த நபர்களுக்கு அபாரதம் விதித்து, பொது இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கடைகளில் பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் பாலசேகரன், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.