உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-23 14:19 IST   |   Update On 2023-09-23 14:19:00 IST
  • கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  • கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் நாடார் திருமண மண்டபத்தில் ஆலங்குளம் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கிளை செயலாளர்களுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, ஆலங்குளம் நகர துணை செயலாளர் சாலமோன்ராஜா, ராமலிங்கம், புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பால் விநாயகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீரபாண்டியன், பூலாங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிக்சன், தங்கசாமி முத்தையா, தனபால், குமரன், செந்தில் முருகன். பெரியபாண்டியன், முத்துராஜ், ஐசக் சேகர், சத்தியராஜ் உள்பட அ.தி.மு.க. நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News